கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் பாஜகவினர் ; பெட்ரேல் டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்...!

கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் பாஜகவினர் ; பெட்ரேல் டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்...!


bjp-rally-in-chennai-demanding-reduce-of-petrol-diesel--UV3KRB

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜகவினர்  நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.  இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.  

அதே சமயம் மாநில அரசுகள் தங்கள் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது.  இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை 72 மணிநேரத்திற்குள் குறைக்க வேண்டும், இல்லையெனில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தார்.  

அவர் விடுத்திருந்த கெடு முடிவடைந்ததால் இன்று பாஜக சார்பில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாட்டில் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது.  அதனடிப்படையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்கி நடைபெற்று வருகிறது.