பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவரை சரமாரியாக வெட்டிக்கொலை! ஒசூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!bjp-member-murdered

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத். 35 வயது நிரம்பிய இவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். ரங்கநாத் அவரது மகனின் பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் வீட்டில் கொண்டாடியுள்ளார். 

அப்போது ரங்கநாத் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவரிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். அவர் தப்பிக்க முயன்றபோது பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் ரங்கநாத் சம்பவ இடத்திலே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Murder

இந்நிலையில், ரங்கநாத் கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் கெலமங்கலம் சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.