சீமான், திருமாவளவனுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த எச். ராஜா.. இதை செய்தால் அவ்வுளவுதான்..!

சீமான், திருமாவளவனுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த எச். ராஜா.. இதை செய்தால் அவ்வுளவுதான்..!


BJP H Raja Pressmeet

இந்தியாவில் பயங்கரவாத செயலை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்தது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது., சீமான் மற்றும் திருமாவளவன் போன்றோர் பி.எப்.ஐ-க்கு ஆதரவாக செயல்படுவது பயங்கரவாதத்தை வளர்க்கும் செயல். தேச நலனுக்கு எதிரானது என எச்.ராஜா பேசினார்.
 
செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவிக்கையில், "திராவிட கட்சிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் ஆவார்கள். சீமானும், திருமவளானும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதவராக சொம்பு தூக்க வேண்டாம். மத்திய அரசு தனது அறிக்கையில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதவாக பேசுவது, சமூக வலைத்தளங்களை பதிவு செய்வது தேச நலனுக்கு எதிரானது என்று கூறிவிட்டது. கவனமாக இருங்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள், இந்தியாவில் பயங்கரவாத செயலை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்தது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. 2017 ல் பி.எப்.ஐ மாநாட்டில் திருமாவளவன் பேசுகையில் காங்கிரஸா? பாஜகவா? என்ற அரசியல் நிறைவு பெற்றுவிட்டது. ஆர்.எஸ்.எஸ்-ஆ? பி.எப்.ஐ-யா? என்ற யுத்தம் தொடங்கிவிட்டது. 

bjp

இந்த யுத்தத்தில் பி.எப்.ஐ-க்கு திருமாவளவன் ஆதரவாக அன்றே பேசினார். 24 பேரை நானே கொலை செய்தேன் என்று கூறிய யாசினை காஷ்மீரில் இருந்து அழைத்து வந்து சீமான் தமிழகத்தில் மாநாடு நடத்துகிறார். அக். 2ம் தேதி திருமாவளவன் பாப்புலர் பிராண்ட் அமைப்புக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாக தெரிவித்துள்ளார். அதனைப்போல, சீமான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுகிறார். 

ஈ.வெ இராமசாமி 21ம் பக்கத்தில் கூறியதை போல மனைவியை விற்பனை செய்யும் திராவிடியன் ஸ்டாக்கிஸ்ட் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். தேசவிரோத தீய சக்திகளை தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது இல்லை. இஸ்லாமிய பயங்கரவாதத்தை நான் 1998 ல் கோவையில் நேரில் பார்த்தவன். ஸ்டாலின் அதனை நேரில் பார்க்கவில்லை" என்று பேசினார்.