ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
என்னது.. பிக்பாஸ் சீசன் 9 தொடங்கவுள்ளதா! அரசல்புரசலாக வெளியான நியூ அப்டேட்! எப்போது ஆரம்பம்? ரசிகர்கள் ஆர்வத்தில்.....
பிக்பாஸ் சீசன் 9 விரைவில் தொடங்கவிருக்கிறது என்பதைத் தொடர்ந்து, இந்த சீசனின் தொகுப்பாளர் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை எட்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. கடந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்ததோடு, அதன் முந்தைய சீசன்களில் கமல்ஹாசன் தலைமையிலான தொகுப்பு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தற்போது கமல் இந்த 9வது சீசனிலும் ஆண்டவர் என அழைக்கப்படும் வகையில் திரும்பவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீசன் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், புதிய சீசனில் யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்ற ஏதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில், பிக்பாஸ் தெலுங்கு அணியினர் இந்த முறையில் பொதுமக்களும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளனர். இது தமிழ் ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
முந்தைய பிக்பாஸ் சீசன்கள் சில ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெற்றுள்ளன. ஆனால், கொரோனா பின்னர் அக்டோபரில் துவங்கி ஜனவரியில் முடிவடைந்தன. தற்போது கிடைக்கும் தகவலின்படி, பிக்பாஸ் 9 இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.