ஆயில் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளி! மூன்று நாட்களில் கேட்ட பணம்! காதல் மனைவியுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல்! நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்...



theni-man-poisons-self-after-oil-theft-incident

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேஸ்வரன், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் முத்துச்செல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் வேலை பார்த்து வந்த ஆயில் மில் நிறுவனத்தில் இருந்து கழிவாயிலை 18,000 ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த நிறுவனம் உரிமையாளர் ராஜாராம், பணத்தை திருப்பி கொடுக்க கூறினார். முருகேஸ்வரன், மூன்று நாட்களில் பணத்தை தருவதாக உறுதி அளித்த பின்னரும், அதற்குப் பிறகு அவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

பணத்திற்காக தன்னை தாக்குவார் என்ற அச்சத்தில், முருகேஸ்வரன் தனது மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். மயங்கி கிடந்த இருவரும் அருகிலுள்ளவர்கள் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஒரே வீட்டில் வேறு வேறு அறையில் கணவன் மனைவி இருவரும்! அந்தக் கோலத்தில் பார்த்து உறைந்து போன உறவினர்கள்! அனாதையான நிலையில் கதறும் 3 குழந்தைகள்! சிவகங்கையில் நடந்த அதிர்ச்சி!

முருகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி முத்துச்செல்விக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துயரச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதையும் படிங்க: டாக்டரை சந்திக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! இதுக்காக ஓடி வந்து பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்து! வாலிபர் செய்த கொடூரமான செயல்! வெளியான வீடியோ காட்சி..