அரசு பள்ளியை தனியார் பள்ளியை போல் மாற்றிய மாது வாத்தியார் திடீர் மரணம்! உருகும் 2002 பேட்ச் மாணவர்கள்!

அரசு பள்ளியை தனியார் பள்ளியை போல் மாற்றிய மாது வாத்தியார் திடீர் மரணம்! உருகும் 2002 பேட்ச் மாணவர்கள்!



best-retired-school-teacher-died

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் s.ஆரோக்கியசாமி மாதவன். இவர் சில வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆரோக்கியசாமி மாதவன் அவர்களை ஆலங்குடி பகுதியில் மாது வாத்தியார் என்றே அழைப்பார்கள். ஆசிரியர் மாதவன் அவர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதையும் தாண்டி ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலை பள்ளியில் விளையாட்டு, நாட்டு நலப்பணி திட்டம், மற்றும் பள்ளியில் நடத்தப்படும் விழாக்களுக்கான ஏற்பாடு ஆகியவற்றில் அவரே அதிகமாக ஆர்வம் காட்டி அந்த பள்ளியையே ஒரு தனியார் பள்ளி அளவிற்கு மாத்தியவர் தான் ஆசிரியர் மாதவன்.

மாது வாத்தியார் அவர்களிடம் படித்த பல மாணவர்கள் தற்போது பல துறையில் உயர்ந்துள்ளனர். அவரிடம் 1999, 2000 போன்ற வருடங்களில் படித்த மாணவர்களை தற்போது அவர் சந்தித்தால் பெயர் சொல்லி அந்த மாணவர்களை அழைத்து தம்பி நல்லா இருக்கிறீங்களா என்ன பண்றீங்க என கேட்பாராம். இதை பார்த்த மாணவர்கள் பலர் எப்படி சார் இத்தனை வருடங்கள் கழித்தும் எங்களது பெயர்களை ஞாபகம் வைத்துள்ளீர்கள் என ஆச்சர்யமுடன் கேட்பார்களாம்.

மாணவர்கள் புரிந்து தான் பாடத்தை படிக்க வேண்டும். ஒருபோதும் பாடத்தை புரியாமல் மனப்பாடம் செய்யாதீர்கள் என கூறி பாடம் நடத்துபவராம் ஆசிரியர் மாதவன். அப்பள்ளியில் ஆரம்ப சமயத்தில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத காரணத்தால், இவரது சொந்த விருப்பத்தால் பல மாணவர்களை ஓட்டப்பந்தயம், கபடி என பல விளையாட்டுகளில் பல மாணவர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார் ஆசிரியர் மாதவன்.

மாது வாத்தியாரின் பல்வேறு முயற்சிகளால் தற்போது அந்தப் பள்ளி ஒரு தனியார் பள்ளியை போலவே காட்சியளிக்கிறது. மாதா ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் தனியார் பள்ளியில் படிப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அவரிடம் கல்வி பயின்ற பல மாணவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மரியாதை மரியாதை வருகின்றனர்.

மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவரிடம் கல்வி பயின்ற பல மாணவர்கள் இணையதளம் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரிடம் பயின்ற ஒரு பள்ளி மாணவன் ராஜ் என்பவர் கபடி விளையாடுவதில் எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அப்போது அந்த மாணவனுக்கு உடல் தகுதி இல்லை எனக்கூறி நிராகரிக்கப் பட்டுள்ளார்.  இதனால் மனமுடைந்த அந்த மாணவர் ஆசிரியர் மாதவனிடம் சென்று சார் எனக்கு கபடியில் பெரிய ஆளாக ஆகவேண்டும் என கூறியுள்ளார். இதன் பிறகு அந்த மாணவரின் தனிப்பட்ட விருப்பத்தால் அந்த ஆசிரியர் அவருக்கு பல பயிற்சிகளை கொடுத்து கபடியில் ஒரு சிறந்த வீரனாக உருவாக்கப்பட்டு அந்தப் பள்ளியின் 2002 ஆம் ஆண்டு கபடி அணியின் அணித்தலைவராக உருவாகும் அளவிற்கு அவரை மாற்றி அந்த மாணவனை ஒரு சிறந்த விளையாட்டு வீரராக உருவாக்கி பல பதக்கங்களை பெற வைத்துள்ளார். இந்தநிலையில் அந்த மாணவன் தற்போது பெங்களூரு அருகே உள்ள ஓசூரில் பணியாற்றி வரும் நிலையில் ஆசிரியர் மாதவனின் மரணச் செய்தி கேட்டு அவரது இருசக்கர வாகனத்திலேயே சொந்த ஊருக்கு வருவதாக அவரது பெற்றோர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.