தமிழகம்

முன்னாள் சுகாதார துறை அதிகாரி பீலா ராஜேஷ் குடும்பத்தில் ஏற்பட்ட சோகம்.. கட்சி தலைவர்கள் இரங்கல்.!

Summary:

Beela rajesh father died

தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கியபோது, கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்று திறம்பட செய்து வந்ததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டவர் பீலா ராஜேஷ். 

இந்நிலையில் திடீரென பீலா ராஜேஷின் தந்தை உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட வெங்கடேசன் 1962 ஆம் பேட்ச் ஐ.பி.எஸ்.அதிகாரியாக தொடங்கி, காவல்துறையினருக்கு சிறந்த அதிகாரியாக திகழ்ந்தவர். 

இவர் சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் கொட்டிவாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.இவரின் இறப்பிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலையும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். 


Advertisement