தமிழகம் சினிமா

மருத்துவமனையில் கண்ணீர் விட்டு அழுத பாரதிராஜா.! எஸ்.பி.பி குறித்து பாரதிராஜா கூறிய தகவல்.!

Summary:

barathiraja talk about spb


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் நேற்று திடீரென பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை  மோசமாகி மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதிகபட்ச உயிர்காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பான தகவல் வெளிவந்ததும் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பிரபலங்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் இன்று மருத்துவமனைக்கு சென்ற இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி-யின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா. எஸ்.பி.பி  ஒரு சிறந்த பாடகர் மட்டுமல்லாமல் சிறந்த மனிதரும் ஆவார். இந்த சூழ்நிலையில் இருக்கும் அவரை கண்டிப்பாக கடவுள் காப்பாற்றவேண்டும். நான் துக்கத்தில் இருப்பதால் என்னால் பதில் கூறமுடியவில்லை. நாங்கள் இருவரும் வாடா.. போடா... என்றே தான் பேசுவோம் என கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசினார்.


Advertisement