தமிழகம்

சுழற்றி அடித்த சூறாவளி காற்று! தொட்டிலுடன் பறந்த குழந்தை! பின் நேர்ந்த ஆச்சர்யம்!

Summary:

baby-flow-with cradle at salem district

சேலம் மாவட்டம் வாழப்பாடி, கணபதி கவுண்டர் தெருவில் வசித்து வந்தவர் இளையராஜா. இவரது மனைவி அமராவதி. இவர்களுக்கு ஒரு வயதில் சுபஸ்ரீ என்ற குழந்தை உள்ளது.
இளையராஜாவின் வீடு இரும்புச் சட்டங்கள் மற்றும் ஆஸ்பெட்டாஸ் சிமெண்ட் அட்டை கொண்டு மேற்கூரையிடப்பட்டது.  

இந்நிலையில் சமீபத்தில் வாழப்பாடி பகுதியில் கடுமையான சூறைக்காற்றுடன்,  கனமழை பெய்துள்ளது. இத்தகைய சூறாவளி காற்றில் இளையராஜாவின் வீட்டு மேற்கூரை, இரும்புத்தகடுகளுடன் அடியோடு பெயர்ந்து 50 அடி உயரத்திற்கு பறந்தது. இந்நிலையில் இரும்பு சட்டத்தில் தொட்டில் கட்டப்பட்டு, அதில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சுபஸ்ரீயும் சூறைக்காற்றில் அதனுடன் பறந்தது.

பின்னர் மேற்கூரையுடன் குழந்தை 100 மீட்டர் தூரத்திலுள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் விழுந்துள்ளது. இதற்கிடையில் தங்களது குழந்தையை காணவில்லை என இளையராஜா தம்பதியினர் பல இடங்களிலும் தேடியுள்ளனர். பின்னர் விவசாய நிலத்தில் கிடந்த மேற்கூரையை அகற்றி பார்த்தபோது உள்ளே குழந்தை அழுது கொண்டு கிடந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement