90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
சென்னையில் ஆட்டோ, டாக்ஸி இயங்க அனுமதி! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் சென்னையில் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 4வது கட்டமாக மே 31 வரை நீட்டிக்கபட்டுள்ளது. மேலும் அப்பொழுது சில தளர்வுகள் விதிக்கபட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 23ஆம் தேதி சென்னையைத் தவிர தமிழகத்தில் பல பகுதிகளிலும் சில நிபந்தனைகளுடன், பாதுகாப்புடன் ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும்
நேற்று முதல் உள்நாட்டு சேவைகள் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் 200 ரயில்களை இயக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் சர்வதேச விமான சேவைகளும் தொடங்க உள்ளது.
இந்நிலையில் சென்னை திரும்பும் பயணிகள் சிரமப்படாமல் அவர்களுக்கு உதவும் வகையில், ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் ஆட்டோ மற்றும் டாக்ஸியை இயங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.