தமிழகம்

புத்தகம் கொண்டு வராததால் 5 ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர்! பின்னர் நொடிப்பொழுதில் நிகழ்ந்த அசம்பாவிதம்!

Summary:

Athinarayanan

பள்ளிக்கு புத்தகம் எடுத்து வர தவறிய மாணவியை ஆசிரியர் ஒருவர் தன்னுடைய பிரம்பால் தாக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரம்பு உடைந்த குறித்து மாணவியின் கண்ணில் படவே பார்வையை இழக்க நேரிட்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆதிநாராயணன். இவர் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க வகுப்பறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த வகுப்பில் சில மாணவர்கள் புத்தகம் கொண்டு வராமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ஆதிநாராயணன் ஒரு பிரம்பால் அனைத்து மாணவர்களையும் தாக்கியுள்ளார்.

அதேபோல் முத்தரசி என்ற மாணவியையும் பலமாக தாக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரம்பு முறிந்து மாணவியின் கண்ணில் தாக்கியுள்ளது.உடனே முத்தரசியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு உடனே ஆபரேசன் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அப்படியே ஆபரேஷன் செய்தாலும் கண் பார்வை மீண்டும் கிடைப்பது கடினம் எனவும் கூறியுள்ளார்.

அதனை அடுத்து மாணவி முத்தரசியின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர் அறுவை சிகிச்சை செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.ஆசிரியர் ஆதிநாராயணனின் செயலால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகக் வழக்குப் பதிவு செய்த கூடங்குளம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement