அடேங்கப்பா! தனியார் நிறுவனத்தில் கைவரிசை காட்டிய சி.ஆர்.பி.எப் வீரர்..41 லட்சம் கொள்ளை.!

சென்னை கீழ்பாக்கம் அருகே தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது ஹாரிங்டன் சாலைப் பகுதியில் வசித்து வரும் ஜேக்கப் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த மாதம் அலுவலகத்தின் பின்கதவை உடைத்து மர்ம நபர் 41 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்தக் கொள்ளை சம்பவம் பற்றி தனியார் நிறுவனம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கீழ்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் ஸ்கிராப் பொருட்களை குத்தகைக்கு எடுத்து வந்த முன்னாள் சி.ஆர்.பி.எப் வீரர் சக்திவேல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரரான சக்திவேலை கைது செய்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொழில் நஷ்டத்தால் முன்னாள் சி.ஆர்.பி.எப் வீரர் கொள்ளையனாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.