ஜாதிய பாகுபாடுகளும், ஜாதிய கொலைகளும் அதிகம் நடப்பது தமிழகத்தில் தான்: அண்ணாமலை அதிரடி..!

ஜாதிய பாகுபாடுகளும், ஜாதிய கொலைகளும் அதிகம் நடப்பது தமிழகத்தில் தான்: அண்ணாமலை அதிரடி..!


Annamalai said the most common place of caste discrimination and caste killings in Tamil Nadu

மதுரை மாவட்டம், காரைக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை விமானத்திற்கு வந்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை காலை 10 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்த பிறகு இங்குள்ள தனியார் ஹோட்டலில் முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நாளை மாலை சிவகங்கை மாவட்டத்திற்கு புறப்படுகிறார். பா.ஜனதா கட்சியின் சார்பில் அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

அவர் மேலும், மருது பாண்டியர்களின் நினைவை போற்றும் வகையில் திருப்பத்தூர் சென்று பா.ஜனதா தேசிய தலைவர் மரியாதை செலுத்த உள்ளார். அதன் பிறகு மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். தமிழகத்தில் தான் ஜாதிய பாகுபாடு அதிகம் உள்ளது. இந்தியாவிலேயே  ஜாதிய கொலைகள் அதிகம் நடப்பது தமிழகத்தில் தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.