பாஜகவில் இருந்து விலக அண்ணாமலையே காரணம்... குற்றச்சாட்டுகளை அடுக்கும் காயத்ரி ரகுராம்... !!

பாஜகவில் இருந்து விலக அண்ணாமலையே காரணம்... குற்றச்சாட்டுகளை அடுக்கும் காயத்ரி ரகுராம்... !!



Annamalai is the reason for leaving BJP... Gayathri Raghuram is making accusations...

அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் நடிகை காயத்ரி ரகுராம். பாஜகவில் இருந்து விலகுகிறார்.

காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்து வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் மாதம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுதாகவும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் கூறி  கட்சியில் அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்பட்டார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தார். தன் மீது அன்பு கொண்டவர்கள்  தன்னிடம் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் எனவும் அதை யாராலும் நிறுத்த முடியாது என்று கூறிய காயத்ரி ரகுராம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும், நாட்டுக்காக உழைப்பேன் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் மற்றும் ஊடகங்களில் தமிழக பாஜக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் இன்று  தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்களுக்கு சம உரிமை, மரியாதை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். மேலும் அண்ணாமலை தலைமையின் கீழ் இயங்கும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்களை பற்றி யாரும் கவலைபடுவதில்லை. அண்ணாமலைக்கு கட்சியில் இருந்து உண்மை தொண்டர்களை விரட்டுவது மட்டுமே ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.