"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
"அவர் போலி சாமியாராகத்தான் இருக்க வேண்டும்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!!
அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
அதில், சனாதனத்தை பற்றி அவதூறாக பேசியிருந்தார். அதாவது, சனாதனத்தை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும் என்றும், டெங்கு, மலேரியா, கொரோன போன்றவற்றை எதிர்க்க முடியாது ஒழிக்க வேண்டம் அது போல தான் சனாதனமும் என்று அவர் கூறியிருந்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் இது குறித்து கேட்கும் போதெல்லாம் அவர் சொன்ன கருத்தில் உறுதியாக நின்றுள்ளார். இதனால் அவருக்கு எதிராக பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 'ஒருவரது தலைக்கு விலை வைப்பவர், போலி சாமியாராகத்தான் இருக்க வேண்டும்; அவர் சனாதனத்தை பின்பற்றவில்லை' என தெரிவித்துள்ளார்.