தினமும் குடித்துவிட்டு வந்து அராஜகம்; பொறுக்க முடியாமல் பெற்றோர் எடுத்த முடிவு..!

தினமும் குடித்துவிட்டு வந்து அராஜகம்; பொறுக்க முடியாமல் பெற்றோர் எடுத்த முடிவு..!



Anarchy comes every day drunk; Unable to bear the decision taken by the parents..

மதுரையில் மதுபோதையில் தகராறு செய்த மகனை, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை சொக்கலிங்கநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (56). இவருடைய மனைவி குருவம்மாள் (50). இவர்கள் அந்த பகுதியில் வடை வியாபாரம் செய்து வந்தனர். இவர்களது மூத்த மகனுக்கு திருமணமாகி மாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் மாரிச்செல்வம் (27). பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றி வருகிறார். இவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு  வந்து தகராறு செய்வதை‌ வாடிக்கையாக வத்திருந்துள்ளார். மேலும் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று குடிப்பது போன்ற செயல்களையும் செய்து வந்துள்ளார். 

இதனால் மாரிச்செல்வத்தை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மாரிச்செல்வம் அதிகமான குடி போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரை, தந்தை நாகராஜன் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாரிச்செல்வம், தந்தையை தாக்கி இருக்கிறார். அவரை தடுக்க வந்த தாயையும் கீழே தள்ளி விட்டுள்ளார்.

பிறகு அவர் வீட்டின் அறையில் படுத்து தூக்கி விட்டார். தினமும் குடித்துவிட்டு விட்டு தகராறில் ஈடுபடும் மகனின் அட்டகாசத்தை நினைத்து ஆத்திரம் அடைந்த பெற்றோர், மகனை கொலை செய்ய முடிவு செய்தனர். மதுபோதையில் இருந்த மாரிச்செல்வத்தின் கழுத்தை கயிரால் இறுக்கி கொலை செய்துள்ளனர். அதன்பின்னர் அவர்கள் இருவரும், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு சென்று தனது மகனை கொன்றுவிட்டதாக சொல்லி சரன்னடைந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாரிச்செல்வத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டின் மாடியில் குடியிருந்த, மூத்த மகனிடமும் இது குறித்து விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நாகராஜன், குருவம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.