வயிற்றை கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலை: முதியவரின் செயலால் கலங்கிய மக்கள்..!

வயிற்றை கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலை: முதியவரின் செயலால் கலங்கிய மக்கள்..!


An old man commits suicide by tearing open his stomach with a knife

தூத்துக்குடி பகுதியில் உள்ள அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் சுப்பையா (67). இவரது மனைவி சுந்தரம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து தூத்துக்குடியில் அவர்களது கணவர்களுடன் வசித்து வருகின்றனர். சுப்பையா தன்னுடைய வீடுகளை வாடகைக்கு விட்டு, அதன்மூலம் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுந்தரம்மாள் மரணமடைந்துள்ளார். இதன் காரணமாக சுப்பையா மட்டும் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்தார். மனைவி இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட சுப்பையா, வயிற்று வலி நோயாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று வயிற்றை கத்தியால் கிழித்துக்கொண்டு குடல் சரிந்த நிலையில் வீட்டில் சுப்பையா பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர், அவர் எழுதிய கடிதத்தையும், தற்கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், 'எனது மனைவி இறந்தத பின்பு வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லை. மேலும் வயிற்று வலியால் அவதியுற்று வருகிறேன். என்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. வயிற்றை கத்தியால் கிழித்து கொண்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.