பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னை சட்டக் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்ற இரு பிரிவினரையும் சமரசம் செய்துகொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே திடீரென்று தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் சித்திரைச் செல்வன், பாரதி கண்ணன் உட்பட சில மாணவர்கள் கடுமையாக காயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள தனி ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை முடிவில் தாக்குதலில் ஈடுபட்ட 21 மாணவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த 21 பேரில் பெரும்பான்மையோர் சட்டம் படிப்பை முடித்திருந்தாலும் வழக்கறிஞர் பணியை தொடர பார் கவுன்சில் தடைவிதித்திருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட இந்த மாணவர்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இருபிரிவினரையும் சமாதானமாக செல்ல அனுமதி அளித்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.