வரும் தேர்தலில் அதிமுக - அமமுக பிரிந்து செயல்பட்டால் இது தான் நடக்கும்.! மாற்றம் ஏற்படுமா.? காத்திருக்கும் தொண்டர்கள்.!

வரும் தேர்தலில் அதிமுக - அமமுக பிரிந்து செயல்பட்டால் இது தான் நடக்கும்.! மாற்றம் ஏற்படுமா.? காத்திருக்கும் தொண்டர்கள்.!



ammk and admk members expectations

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முக்கிய தலைவர்களான ஜெயலலிதா இல்லாத அதிமுகவும், கருணாநிதி இல்லாத திமுகவும் மற்றும் பல புதிய கட்சிகளும் போட்டியிட உள்ளனர்.

ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இந்தநிலையில் தற்போது சசிகலா அவர்கள் சிறையில் இருந்து வந்தபிறகு அதிமுக ஒன்றாக இணைந்து செயல்படுமா.? என்று எதிர்பார்க்கப்பட்டது. சசிகலா அவர்களும் எதிரிகளை வீழ்த்த அதிமுக ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனாலும் சசிகலா அவர்களுடன் கட்சியில் ஒன்றிணைந்து செயல்பட அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் விரும்பவில்லை.

Admk

ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில் அமமுகவை இணைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. சசிகலா , தினகரன் அதிமுக கூட்டணிக்குள் வராமல் தேர்தலை சந்திப்பது பேராபத்து என கருதுகின்றனர் அதிமுக தொண்டர்கள். அதேபோல் தென் மாவட்டங்களில் அதிமுக ஓட்டுகளை பெற வேண்டும் என்றால் சசிகலா அவர்கள் கட்சியில் இருந்தால் தான் அது சாத்தியம் ஆகும் என்றே பல அதிமுக அமைச்சர்களின் கணிப்பாக உள்ளது. சசிகலாவை எதிர்த்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் மீண்டும் 1989ல் ஏற்பட்ட நிலை ஏற்பட்டு, இன்றைய அதிமுகவே வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சியில் அமரவைக்க காரணமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசுகின்றனர்.