அரசியல் தமிழகம்

கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Summary:

all party meeting

சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 வரைவு (இ.ஐ.ஏ) எதிராக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. 

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. 

1. கொரோனா மரணங்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.

2. கொரோனா காலத்தில்  வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி வழங்க வேண்டும் என அ.தி.மு.க. அரசை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

3. கொரோனாவால் பாதிக்கப்பட்ட- உயிர்த் தியாகம் செய்த கொரோனா முன்கள வீரர்களுக்கான நிதியுதவி வழங்கிட வேண்டும்.

4. உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிப்பதைக் கைவிட்டு - அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உரிய நிதி வழங்கிட   வேண்டும்.

5. அரசியல் கண்ணோட்டத்துடன் நடக்கும் காவல் துறை இந்தப் போக்கை கைவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

6. பிற்படுத்தப்பட்டோர் - பட்டியலினத்தோர் - பழங்குடியினர் இடஒதுக்கீடுகளை முழு வீச்சில் செயல்படுத்திட   வேண்டும்.

7. நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும்.

8. இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை (EIA 2020 Draft-ஐ) மத்திய அரசு  உடனடியாக திரும்பப்பெற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..


Advertisement