13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
தமிழக முதல்வரின் அசத்தல்!! தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்!!

ஓசூர், நாகர்கோவில் ஆகிய பகுதிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் மேலும் 2 மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலும், நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தப் படும் சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார்.
ஓசூர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பட்சத்தில், இரு பகுதிகளில், பரப்பரப்பளவு விரிவடையும். வேலைவாய்ப்புகள், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை தேவையான வசதிகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.