சுபஸ்ரீயை தொடர்ந்து தமிழகத்தில் மற்றுமொரு சோகம்! கட்சி கொடியால் ஏற்பட்ட பரிதாபம்!

சுபஸ்ரீயை தொடர்ந்து தமிழகத்தில் மற்றுமொரு சோகம்! கட்சி கொடியால் ஏற்பட்ட பரிதாபம்!


again one accident for pary flag

சமீபத்தில் அரசியல் கட்சியின் பேனர் காற்றில் பறந்து வந்ததில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சூழலில் கட்சி கொடி விழுந்ததில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட விபத்து மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுள்ளார் அனுராதா.

accident

அப்போது அனுராதா கோல்டுவின்ஸ் பகுதி வழியே செல்லும்போது எதிர்பாராதவிதமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கட்சி கொடி கம்பம் சரிந்து விழுந்துள்ளது. கொடிக்கம்பம் தன் மீது விழுந்துவிடக்கூடாது என்பதற்காக பிரேக் போட்டுள்ளார். இதனால் வண்டி சறுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அனுராதவை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது கால்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.