தமிழகம்

மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!. உச்சகட்ட சந்தோஷத்தில் மாணவர்கள்!.

Summary:

again leave announced to school


திருப்போரூர் கந்தசாமி கோவில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நவம்பர் 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு வருவாய் கோட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடக்க இருக்கும் திருவிழாவை ஒட்டி நாளை மறு நாள் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாக்களுக்கு விடுமுறை என காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்காக தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளித்ததையடுத்து மீண்டும் பள்ளிக்கு விடுமுறை அளித்ததால் அப்பகுதி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 


Advertisement