தமிழகம்

வழக்கறிஞர் வீட்டு குளியலறையில் மகளுக்கு பாடமெடுத்த ஆசிரியை கொன்று புதைப்பு.! அதிர்ச்சி பின்னணி.!

Summary:

மதுரையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் தனது மனைவியை விவாகரத்து பெற்று 10 வயது மகளுடன

மதுரையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் தனது மனைவியை விவாகரத்து பெற்று 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் வசிக்கும் பகுதியில் இருந்த சித்ராதேவி என்ற யோகா ஆசிரியையும் கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார். அவரிடம் ஹரிகிருஷ்ணனின் மகள் யோகா பயின்று வந்துள்ளார்.

இந்தநிலையில் தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் சென்று வந்தபோது சித்ரா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்திந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம்தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் மாயமானார். இதனையடுத்து, சித்ரா தேவியின் தந்தை காவல் நிலையத்தில் தனது மகள் கண்ணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேர்தலை காரணம் காட்டி வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றினர். வீட்டில் ஹரிகிருஷ்ணன் தனது கைகளால் எழுதிவைத்த கடிதமும் எடுக்கப்பட்டது.

அந்த கடிதத்தில் சித்ராதேவியை தானே கொலை செய்து குளியலறையில் புதைத்து இருப்பதாகவும் இது அனைத்தும் தானே செய்ததாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணம் அல்ல எனவும் கொலை செய்த குற்றத்தை பொறுக்க முடியாமல், தனக்குத்தானே தண்டனையை கொடுத்துக் கொண்டதாகவும் எழுதியிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement