மூத்த அதிமுக முக்கியப் புள்ளி, முன்னாள் எம்எல்ஏ காலமானார்; அரசியல் கட்சியினர் அஞ்சலி.!

மூத்த அதிமுக முக்கியப் புள்ளி, முன்னாள் எம்எல்ஏ காலமானார்; அரசியல் கட்சியினர் அஞ்சலி.!



Admk ex MLA dead in Trichy musiri

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தொகுதியில் இருந்து கடந்த 1989-ஆம் ஆண்டு மற்றும் 1991-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பிரின்ஸ் எம்.தங்கவேல். 

இவர் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்த தங்கவேல் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார். 

இந்நிலையில வீட்டில் இருக்கும் போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிவிழவே, அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ தங்கவேலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.