தமிழகம் சினிமா

நான் தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தேன் தெரியுமா.? மாணவர்களை ஊக்கப்படுத்த நடிகர் மாதவன் வெளியிட்ட தகவல்!

Summary:

actor madhavan shared his marks

நேற்று ஜூலை 16 ஆம் தேதி  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுவாக தேர்வு முடிவுகள் வெளியானவுடன் ஒவ்வரு வருடமும் எங்காவது ஒரு இடத்தில்  மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். நேற்றயதினம் வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்த மாணவன் குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டோம் என்று தற்கொலை செய்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பள்ளித் தேர்வில் தான் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றேன் என்பதை தன்னுடைய டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் மாதவன். அவரது ட்விட்டர் பதிவில், "பள்ளித் தேர்வு முடிவுகளைப் பெற்ற அனைவருக்கும், அவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி அதை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் வாழ்த்துகள். என் பள்ளித்தேர்வுகளில் 58 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன் என்பதை மீதமுள்ளவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இனிய நண்பர்களே, விளையாட்டு இன்னும் தொடங்கவில்லை"  என்று டிவிட்டரில் மாதவன் தெரிவித்துள்ளார். 


 
அவரது டிவிட்டர் பதிவு மாணவர்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் தரப்பினருக்கும் ஊக்கத்தை அளிக்கும் வகையில் உள்ளது. தன்னுடைய பள்ளித் தேர்வில் 58 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதாக டிவிட் செய்துள்ள அவர், எந்த வகுப்பு என்பதைக் குறிப்பிடவில்லை. நடிகர் மாதவனின் ட்விட்டர் பதிவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Advertisement