தமிழகம் சினிமா Covid-19

தலைவிரித்தாடும் கொரோனா..! நடிகர் மற்றும் எம்.எல். ஏ கருணாசுக்கு கொரோனா தொற்று..! மருத்துவமனையில் அனுமதி.!

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸால் பொதுமக்கள் தொடங்கி, பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள்  என பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழகத்தில் இதுவரை பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். பலர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது கருணாசுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல்  மயிலாடுதுறை பூம்புகார் அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


Advertisement