36 வயதில் மாரடைப்பா.. இளம் நடிகரின் மரணத்தால் அதிர்ச்சிக்குள்ளான திரைத்துறையினர்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் சினிமா

36 வயதில் மாரடைப்பா.. இளம் நடிகரின் மரணத்தால் அதிர்ச்சிக்குள்ளான திரைத்துறையினர்!

கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மற்றும் மருத்துவரான சேதுராமன். இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

36 வயதேயான சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த இறப்பு செய்தியை கேட்டதும் அவரது திரைத்துறை நண்பர்களான குஷ்பு, காயத்ரி ரகுராம், வெங்கட் பிரபு ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது நண்பர் மிக மிக விரைவாக போய்விட்டார். 36 வயதில் மரடபைப்பு வருவது நல்லதல்ல கடவுளே; அவருடைய குடும்ப்ததிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


நடிகை குஷ்பு, "சேதுராமன் உயிரோடு இல்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்போதும் புண்ணகையுடன் தான் இருப்பார். அவரது குடும்பம், மனைவி மற்றும் குழந்தையை நினைத்து கவலையாக உள்ளது" என கூறியுள்ளார்.

மேலும் காயத்ரி ரகுராம், "என்னுடைய நெருங்கிய நண்பரான நடிகர்/மருத்துவர் சேதுராமன் இறந்த செய்தி கேட்டு உடைந்து போனேன். துக்கத்தை சொல்ல வார்த்தையே இல்லை. ஓம் சாந்தி என்னால் நம்பவே முடியவில்லை" என பதிவிட்டுள்ளார்.


Advertisement
TamilSpark Logo