சிபிஐ அதிகாரிகள் என கூறி மொத்தத்தையும் சுருட்டிச்சென்ற மர்மநபர்கள்!சினிமாவை மிஞ்சிய சம்பவம்!



acting as CBI officers Robbery by pretending

திண்டுக்கல் அருகேயுள்ள பொன்னகரம் அண்ணாநகரை சேர்ந்த காளீஸ்வரன் என்பவர்  டாஸ்மாக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் என்ற பெயரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் முறையாக கணக்கு காட்டாததாக கூறி பணம் நகைகளை கொண்டு சென்றனர். 

இதில் சந்தேகம் அடைந்த காளீஸ்வரன் காவல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ரூ.1 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள், நில பத்திரங்களை எடுத்து சென்றதாக கூறியிருந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று வந்தவர்கள் மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது.

acting cbi

இதுத்தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து பல சொத்து ஆவணங்கள், 100 பவுன் நகைகள், 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.