தமிழகம் இந்தியா

சிறையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்த அபிராமி! என்ன காரணம் தெரியுமா?

Summary:

Accused abirami fell down at jail

சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ள காதலால் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு சிறையில் உள்ளார் அபிராமி.

நாகர்கோவிலில் கைது செய்யப்பட்ட அபிராமி தீவிர விசாரணைக்கு பிறகு சென்னை புழலில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். 3 பெண்கள் தங்கக்கூடிய அந்த சிறை அறையில் முதல் நாளில் இருந்து சரியாக சாப்பிடாமலும், தூங்காமலும் அபிராமி இருந்துள்ளார்.

சாப்பிடுவதற்கு அழைத்து சென்றால் அங்கு கூட்டம் கூட்டமாக வந்து சக கைதிகள் வேடிக்கை பார்த்தார்களாம். இந்த நிலையில் தான் நேற்று மாலை அபிராமி திடீரென மயக்கமாகியுள்ளார். பின்னர் சிறை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளாராம்.

தனது தவறை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து வருவதில் தாக்கம் தான் தற்போதைய மன அழுத்ததிற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


Advertisement