தமிழகம்

சென்னையை நோக்கி வேகமாக வந்த சுமோ! திடீரென ஏற்பட்ட விபத்து! குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாப பலி!

Summary:

Accident near thindivanam

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாதிரி கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமோ வாகனம் ஒன்று செல்லும் போது இன்று காலை  திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அங்கு நடந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று பள்ளத்தில் கவிழ்ந்து இருந்த வாகனம் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். காருக்குள் காயங்களுடன் இருந்த இரண்டு குழந்தைகளை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது குறித்து  நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வாகனம் திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி வந்ததாகவும், வாகனத்தில் பயணம் செய்தவர்கள், முருகராஜ், முருகன், சொரிமுத்து உள்ளிட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 


Advertisement