தமிழகம்

இப்படி ஒரு துயரம் யாருக்கும் வரக்கூடாது.! காரில் மருத்துவ சிகிச்சைக்கு சென்று வந்தவர்களுக்கு நேர்ந்த கதி..!!

Summary:

மருத்துவ சிகிச்சைக்கு சென்று வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்..!! லாரி ட்ரைவர் என்ன செய்தார் தெரியுமா..?

சேலம் மாவட்டம் உடையனூர் பகுதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 53). இவருடைய மனைவி இந்திராணி (வயது 51). இந்த தம்பதியினருக்கு 15 வயதுடைய ஒரு மகளும், 11 வயதுடைய ஒரு மகனும் உள்ளனர். தேவநாதன் என்பவர்  வனவாசியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்28) தேவநாதனுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது.

இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தேவநாதன், இந்திராணி மற்றும் அவர்களின் உதவிக்காக சத்தியசீலன் ஆகியோர் காரில் சென்றனர். பின்னர், தேவநாதனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இரவில் வீடு திரும்பியுள்ளனர். வரும் வழியில், ஈரோடு மாவட்டம்  காடப்பநல்லூர் பிரிவு அருகே  வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு லாரி, தேவநாதன் ஓட்டி வந்த காரில் பயங்கரமாக மோதியது.

இதில் தேவநாதன், இந்திராணி, சத்தியசீலன் ஆகியோர் உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைக் கண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement