தமிழகம்

பக்கா செட்டப்... 6 இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Summary:

பக்கா செட்டப்... 6 இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர்(40). இவருக்கும், நெல்லை என்.ஜீ.ஓ பி காலணி உதயாநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்காக பெண்வீட்டார் 40 பவுன் தங்க நகை, ரூ. 3 லட்சம் பணத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்து மூன்று மாத்திலேயே வரதட்சணையாக வந்த நகைகளை வின்சென்ட் பாஸ்கர் விற்றுள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வரதட்சணையாக வந்த பணம் மற்றும் நகைகளை ஏமாற்றியுள்ளார்.

சுவிசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிளாரன்ஸ் என்ற பெண் தனக்கு  தாயாகவும் , தாமரைச் செல்வி என்ற பெண் சித்தியாகவும் நடிக்க வைத்து புரோக்கர் கூறும் இடத்தில் பெண்களைப் பார்த்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி  ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை விசாரணையில் ஒப்புக் கொண்டார்.

6-வதாக பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த வின்சென்ட் பாஸ்கரை போலிஸார் கைது செய்தனர். மேலும் இந்த மோசடி திருமணங்களுக்கு உதவியாக இருந்த அவரது தாயக நடித்த பிளாரன்ஸ், சித்தியாக நடித்த தாமரைச் செல்வி மற்றும் திருமண புரோக்கர் ஆகிய மூன்று பேரையும் போலிஸார் கைது செய்தனர். போலியாக 


Advertisement