அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி தற்கொலை: கடலூர் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு..!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி தற்கொலை: கடலூர் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு..!



A patient treated at a government hospital committed suicide

கடலூர் மாவட்டம், கடலூர் முதுநகர் அருகேயுள்ள வழிசோதனைபாளையம் கிராமம், தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (53). இவர் ஒரு விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது இரு சக்கர வாகனத்தில் அன்னவெளி கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், சங்கர் மீது மோதியது. இந்த விபத்தில் சங்கரின் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து சங்கர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு தோள்பட்டையில் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தனது மனைவி மஞ்சுளாவிடம், கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார்.

கழிவறைக்கு சென்ற சங்கர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி மஞ்சுளா, கணவரை தேடி கழிவறைக்கு சென்றார். அங்கு அவர் கதவை தட்டி பார்த்தும், திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் இது குறித்து தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கழிவறையின் கதவை உடைத்து பார்த்தனர்.

அங்கு அவர், கழிவறை ஜன்னலில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை தொடர்ந்து சங்கரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், எலும்பு முறிவால் வலி தாங்க முடியாமல் அவதியடைந்த சங்கர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.