உரம் ஏற்றி வந்த லாரி.. லாரியில் இருந்த கயிறு அவிழ்ந்ததில் கயிற்றில் சிக்கி தூக்கி வீசப்பட்ட கூலி தொழிலாளி..!

உரம் ஏற்றி வந்த லாரி.. லாரியில் இருந்த கயிறு அவிழ்ந்ததில் கயிற்றில் சிக்கி தூக்கி வீசப்பட்ட கூலி தொழிலாளி..!



A lorry loaded with fertilizer.. a laborer got caught in the rope when the rope in the lorry came loose..!

தூத்துக்குடி அருகே உரம் ஏற்றி வந்த லாரியில் இருந்த கயிறு அவிழ்ந்து  விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்தவரின் கழுத்தில் சுற்றி நிலை தடுமாறி அவர் தூக்கி வீசப்பட்டார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முத்து. இவர் ஏரலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர்திசையில் உரமூட்டை  ஏற்றிச்சென்ற  லாரியில் இருந்து ஒரு உரமூட்டை கீழே விழுந்து கட்டப்பட்டிருந்த கயிறு சாலையில் இழுத்தவாறு சென்றுள்ளது.

Fertilizer load lorry

இதனை அறியாத முத்து அவ்வழியாக பைக்கில் சென்ற போது சாலையில் இழுபட்டுக்  கொண்டு வந்திருந்த கயிறு முத்துவின் கழுத்தில் சிக்கியதில் முத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் காயமடைந்த முத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.