தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
நண்பருடன் அமர்ந்து மது அருந்திய கட்டிட தொழிலாளி... தவறி கிணற்றில் விழுந்து பலியான பரிதாபம்..!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் அருகில் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே இருக்கும் போதபாளையம் கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ் (28). கட்டிட தொழிலாளியான சுரேஷின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனவே அவர் தனியே வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு சுரேஷ், தனது நண்பர் சதீஷ் உடன் அவரது தோட்டத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார்.
குடிபோதை அதிகமானதால் தூங்கிவிட்ட சதிஷ், இரவு 8 மணியளவில் எழுந்து பார்த்துள்ளார். அப்போது, சுரேஷ் இல்லாததால், சதிஷ் பல இடங்களில் தேடினார். எங்கும் சுரேஷ் இல்லாததால், தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என நினைத்த சதிஷ், நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். கிணற்றில் சுரேஷ் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த நம்பியூர் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.