தமிழகம்

பள்ளியிலிருந்து மிக சோர்வாக திரும்பிய சிறுமி! பதறிப்போன பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பகீர் சம்பவம்!

Summary:

9 year child sexually abused by 8 standard student

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கீழ்புத்துபட்டியில் இலங்கை அகதிகள் முகாம் ஒன்று அமைந்துள்ளது. இந்த முகாமை வசித்துவந்த 9 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் வகுப்புகள் முடிந்தபிறகு  பள்ளி வளாகத்தில் பிற மாணவிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது அங்கு வந்த அதே பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவனும், மற்றொரு 13 வயது சிறுவனும் அந்த சிறுமியிடம் ஐஸ்கிரீம் வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துள்ளனர். பின்னர் ஐஸ்க்ரீமுக்கு ஆசைப்பட்டு சென்ற அவரை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று இருவரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

girl abuseக்கான பட முடிவுகள்

அதனை தொடர்ந்து மாலையில் வீடு திரும்பிய சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார்.அவரை கண்டு பதறிப்போன சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியிடம் என்னாச்சு என விசாரணை செய்துள்ளனர்.. அப்போது சிறுமி அழுதுகொண்டே பள்ளியில் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக அந்த சிறுமியை புதுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அந்த 2 சிறுவர்களையும்  கைது செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் தற்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement