தமிழகம்

மர்மமான முறையில் உயிரிழந்த 6 வயது சிறுவன்! குற்றவாளி இவர்தானா! பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

Summary:

6 year child killed by his stepfather

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே பூலக்காட்டூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். பழ  வியாபாரியான இவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் அவருக்கு அப்பகுதியை சேர்ந்த, கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த  சரோஜினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். சரோஜினிக்கு இரு மகள்கள் மற்றும் 6 வயதில் டேனியல் என்ற ஒரு மகன் உள்ளார். 

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு குழந்தைகள் 4 பேரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் டேனியலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குழந்தையின் பிரேதபரிசோதனை அறிக்கையில், குழந்தை அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சக்திவேல், நான் டேனியலை அடிக்கும்போது அவர் சுவற்றில் விழுந்து பலத்த காயமடைந்தார். இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர் உயிரிழந்தார் என ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement