கிராமங்களையும் டார்கெட் செய்ய தொடங்கிய கொரோனா..! ஒரே கிராமத்தில் ஆறு பேருக்கு கொரோனா..! தனிமைப்படுத்தப்பட்ட 46 குடும்பங்கள்..!



6 villagers corono test positive near Nagapatinam

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 46 வீடுகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்து அமைந்துள்ளது பிரதாபராமபுரம் ஊராட்சி. இந்த கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உருத்தியானதை அடுத்து, அந்த 6 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள், பக்கத்தில் வசிப்பவர்கள் என மொத்தம் 46 குடும்பங்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

corono

மேலும் அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஊராட்சியில் உள்ள மற்ற வீடுகளுக்கும் சென்று அங்கிருப்பவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என சுகாதாரத்துறையினர் சோதனை செய்துவருகின்றனர்.