கிருஷ்ணகிரி அருகே அரசுப்பேருந்து மீது மோதிய வேன்.! 6 பேர் பரிதாப பலி.!

கிருஷ்ணகிரி அருகே அரசுப்பேருந்து மீது மோதிய வேன்.! 6 பேர் பரிதாப பலி.!


6 person died in van accident

ஈரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற ஆம்னி வேன் அரசுப்பேருந்தின் பின்புறம் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த 5 பேர் மற்றும் அரசு பேருந்தில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவிரிப்பட்டணம் போலீசார், விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

அங்கு நடந்த விபத்து தொடபாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.