கோவில் திருவில் இரு தரப்பினரிடையே மோதல்..! திருவிழாவை சீர்குலைக்க நினைத்து பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்.!

கோவில் திருவில் இரு தரப்பினரிடையே மோதல்..! திருவிழாவை சீர்குலைக்க நினைத்து பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்.!


6 person arrested for kovi thiruvila issue

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நீர்பழனி கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த கோவில் திருவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த திருவிழாவில் தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கோவில் திருவிழாவை சீர்குலைக்க நினைத்து தகராறில் ஈடுபட்டதாகவும், ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நீர்பழனியை சேர்ந்த ரெங்கநாயகி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்  திருவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.