
5 rs doctor thiruvengadam passed away
வடசென்னையில் ரூ.5 மட்டும் கட்டணம் பெற்று மருத்துவ பணி செய்துவந்த மருத்துவர் திருவேங்கடம் (70) காலமானார். வியாசர்பாடியில் பல்லாண்டு காலம் ரூ.2 கட்டணம் வசூலித்து மருத்துவம் பார்த்து, பின்பு வெறும் ரூ.5 மட்டும் உயர்த்தி பலருக்கும் சிகிச்சை அளித்து வந்தவர் மருத்துவர் திருவேங்கடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவு செய்தி வடசென்னை பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாற்பது ஆண்டு காலம் ஏழைகளிடம் 5 ரூபாய்க்கு அதிகமாக கட்டணம் வாங்காமல் சேவையாற்றி வந்த மருத்துவர் திருவேங்கடத்தின் சேவை தமிழக மக்களையே பிரமிக்க வைக்கிறது.
1973ஆண்டில் 2ரூபாயில் தொடங்கி அண்மையில் 5ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 16, 2020
இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி! pic.twitter.com/MfPRc58cJW
இவரது மரணச்செய்தி அறிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "1973ஆண்டில் 2ரூபாயில் தொடங்கி அண்மையில் 5ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி" என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement