மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுதேர்வா? அதிரடி முடிவை போட்டுடைத்த அமைச்சர் செங்கோட்டையன்!
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயிற்சி புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி கல்வி மேம்பாடு குறித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் கூறியதாவது, கல்வி அலுவலர்கள் ஒழுங்காக வேலை செய்தாலே கல்வியில் தமிழகம் முதலிடம் பெறும். அரசுபள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. மேலும் அதற்காக 1000 வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி திறனை வளர்த்துக்கொள்ள, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. 5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை விரைவில் முதன்மை கல்வி அலுவலர்கள் கல்வித்துறைக்கு வழங்க வேண்டும்.
மேலும் மாணவர்களின் கல்வி, அறிவுத்திறன், திறமையை மேம்படுத்த 5 மற்றும் 8–ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இருக்கும். ஆனால் அவை எளிமையாகவே இருக்கும் அதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.