கொரோனாவின் அசுரதாண்டவம்! தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதி!

கொரோனாவின் அசுரதாண்டவம்! தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதி!


411-people-affected-by-coronovirus-in-tamilnadu

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் இதுவரையில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 

 இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவும்,  சமூகவிலகலை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Coronovirus

இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.