தமிழகம்

தாய் கண் முன்பு தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்! தப்பியோடிய டிரைவருக்கு பொதுமக்கள் வெளுத்துக்கட்டு!

Summary:

4 year boy died front of his mom


சென்னை வளசரவாக்த்தை சேர்ந்த பைசல்- நஸ்ரின் என்ற தம்பதியினருக்கு 4 வயதில் முகமது என்ற மகன் இருந்துள்ளான். முகமது வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்துள்ளான்.

இந்தநிலையில் நேற்று மாலை நஸ்ரின் அவரது மகன் முகமதை பள்ளியிலிருந்து இருச்சக்கரவாகனத்தில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாகவந்த தண்ணீர் லாரி இருச்சக்கரவாகனம் மீது மோதியது.

லாரி மோதியதில் லாரியின் பின்சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் நஸ்ரினின் கண்முன்னரே முகமது பரிதாபமாக இறந்தான். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நஸ்ரின், மகனின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். விபத்து நடந்த அடுத்த நிமிடமே லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார், அதனைப்பார்த்த பொதுமக்கள், லாரி டிரைவரை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பொதுமக்களிடம் சிக்கிய லாரி டிரைவரை மீட்டு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement