மாணவிகள் கையில் மது! அருகில் ஆண் நண்பன்! வைரலான வீடியோவால் தற்கொலைக்கு முயன்ற மாணவி!
மாணவிகள் கையில் மது! அருகில் ஆண் நண்பன்! வைரலான வீடியோவால் தற்கொலைக்கு முயன்ற மாணவி!

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் சிலர் வாலிபர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற காட்சி வெளியாகி சர்ச்சையான நிலையில் மது அருந்திய மாணவிகளை நிரந்தரமாக நீக்க கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் பையிலும் 4 மாணவிகள் கல்லூரி சீருடையுடன், அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவருடன் மது அருந்தியுள்ளனர். கையில் பீர் பாட்டில், சைட்டிஷ் என மாணவிகள் ஆனந்தமாக மது அருந்தும் காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனை அடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய கல்லூரி நிர்வாகம் 4 மாணவிகளையும் கல்லூரியை விட்டு நிரந்தரமாக நீக்கியுள்ளது. இதில் மனமுடைந்த மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.