BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அதிர்ச்சி..! நேற்றைய +2 தேர்வை 34 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை..! அதிர்ச்சி காரணம்..!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது, இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் இன்றில் இருந்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மார்ச் 2 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்றுவருகிறது. 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 மாணவர்கள் தேர்வுக்கு வினாப்பத்திருந்த நிலையில், நேற்றைய தேர்வை மட்டும் சுமார் 34 ,000 மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக முடக்கப்பட்ட ரயில் சேவை, குறைக்கப்பட பேருந்து சேவை இதுபோன்ற காரணங்களால் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை எனவும், மேலும் கொரோனோ நோய் குறித்தான அச்சத்தின் காரணமாகவும் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை எனவும் கூறப்படுகிறது.