தமிழகம்

தஞ்சை மருத்துவ கல்லூரியில் தொடர் இருமல், காய்ச்சலால் 33 பேர் அனுமதி.!

Summary:

33 patients appointed as thanjai medical

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா வைரஸால் இதுவரை தமிழகத்தில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 67 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரியில் தொடர் இருமல் மற்றும் காய்ச்சலால் 33 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடு சென்று ஊர் திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தொடர் இருமல், காய்ச்சல், சளி தொல்லையால் தற்போது தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 33 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெண்கள் 13 பேர். இவர்களின் இரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு திருவாரூர் சோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


Advertisement