Rain Update: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Rain Update: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நிலவரம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சில இடங்களில் இடி-மின்னலோடு மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பின் படி, "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியது, குறைந்தபட்ச வெப்பநிலையாக நாமக்கல்லில் 21 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், "தென்னிந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி காரணமாக 31ம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை மிதமான மழை பெய்யலாம்.
2-ம் தேதி முதல் 4-ம் தேதியை வரை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மலை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.