தமிழகம்

திருச்சிக்கும் வந்துவிட்டது கொரோனா.! துபாயிலிருந்து வந்த இளைஞருக்கு பாதிப்பு..!

Summary:

24 years old young man affected by coronoa

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதில் இந்தியாவில் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 600க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயால் ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இந்நோயை கட்டுப்படுத்த தான் இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் இன்று புதிதாக துபாயிலிருந்து வந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement